×

செட்டித்தாங்கல் ஊராட்சியில் உடைந்திருக்கும் கை பம்பு சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ராணிப்பேட்டை: செட்டித்தாங்கல் ஊராட்சி 12வது வார்டு வள்ளலார் நகர் களத்து மேட்டு தெருவில் உடைந்திருக்கும் கை பம்பு சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை அடுத்த செட்டித்தாங்கல் ஊராட்சி 12வது வார்டு வள்ளலார் நகரில் களத்து மேட்டு தெரு உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இந்த பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு குடிநீருக்காக கை பம்பு ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது அப்பகுதி பொதுமக்கள் அங்குள்ள கை பம்பை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கை பம்பின் கீழ் பாகத்தில் இரு இடங்களில் துருப்பிடித்து ஓட்டைகள் ஏற்பட்டுள்ளது. மேலும், அதன் மேல்பாகத்திலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த கை பம்பு அடியில் செல்லும் கழிவுநீர் இந்த இரண்டு ஓட்டைகளின் வழியே உள்ளே செல்வதால் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் கழிவுநீர் வெளியில் செல்ல முடியாதபடி தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட செட்டித்தாங்கல் ஊராட்சிக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடைந்திருக்கும் குடிநீர் கை பம்ப்பினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chettikal Panchayat , Hand pump
× RELATED சபரிமலை அருகே தமிழக பக்தர்கள் சென்ற...